புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இயற்கையின் சீற்றத்தால் பிரபல நடிகரின் வீடு வெள்ளத்தில் மூழ்கி குடும்பத்தினர் தவிப்பு!.
கேரளாவில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் விடாத கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. இதுவரை வெள்ளத்தால் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மழையினால் வீடு, வாசல்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிகமாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில்உள்ள நடிகர் ப்ரித்திவிராஜின் வீடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.