இந்தியா வர்த்தகம்

ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு.! எப்போதிலிருந்து தெரியுமா.?

Summary:

நாடுமுழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நாடுமுழுவதும்

நாடுமுழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நாடுமுழுவதும் வங்கிகள் குறைந்த நேரமே இயங்கி வருகின்றன. இதனால் இந்தநிலையில் பலரும் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏ டி எம் களை நம்பி உள்ளனர். 

இந்தநிலையில், வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தற்போது வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஏ டி எம் களில் இருந்து 5 முறை பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளைக் கட்டணமின்றி பெற முடியும்.

அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.21 வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.  இந்த கட்டண விதிப்பை 2022 ஜனவரி 1க்கு மேல் விதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


Advertisement