வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
முன்னாள் முதல்வர் உடல்நல குறைவால் திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான ஷீலா தீக்ஷித் இன்று உடல்நல குறைவால் காலமானார். 81 வயதாகும் இவர் 1998ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
காங்கிரஸ் கட்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார்.
அதன்பின்னர் கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். தற்போது டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பதவி வகுத்துவந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைக்கவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.