ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"தலைக்கேறிய போதையில் தாய் மீது பாய்ந்த மகன்..." அடித்தே கொன்ற தந்தை.!!
தெலுங்கானா மாநிலத்தில் மது போதையிலிருந்த மகன், தாயை பலாத்காரம் செய்ய முயன்ற போது அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபரின் தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகய்யா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஸ்ரீதர்(28) என்ற மகன் இருந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதர் எப்போதும் போதையில் இருந்திருக்கிறார். மேலும் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி பிரச்சனை செய்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மது போதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் தனது தாயை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

தாய் என்றும் பார்க்காமல் அவர் மீது பாய்ந்த ஸ்ரீதரை கட்டையால் கடுமையாக தாக்கியிருக்கிறார் நாகய்யா. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது தந்தை நாகய்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!
கைது செய்யப்பட்ட அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் பெத்த தாயை, மகனே பலாத்காரம் செய்ய முயன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!