நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மது போதையிலிருந்த மகன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள குட்டிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(65). இவரது மகன் நிஷாந்த். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் தந்தை மற்றும் மகனிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்திருக்கிறது.

இதனையடுத்து சம்பவம் நடந்த தினத்தன்று மது போதையில் வீட்டிற்கு வந்த நிஷாந்த் ககராறு செய்திருக்கிறார். இது தொடர்பாக தந்தை மற்றும் மகனிடயே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நிஷாந்த் தனது தந்தை, ரவியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!
இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ரவி உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸ், நிஷாந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!