இந்தியா

தாலி கட்ட இன்னும் கொஞ்ச நேரம்தான்!! அதுக்குள்ள மணமகன் செய்த காரியம்!! திருமணத்தையே நிறுத்திய மணமகள்..

Summary:

திருமணத்தின்போது குடித்துவிட்டு மணமகளை நடனம் ஆட மணமகன் வற்புறுத்தியதால் திருமணம் நின்ற சம்

திருமணத்தின்போது குடித்துவிட்டு மணமகளை நடனம் ஆட மணமகன் வற்புறுத்தியதால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில், சனிக்கிழமை இரவு திக்ரி என்ற இடத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இதில், திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன் மணமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அதுமட்டும் இல்லாமல், மணமேடைக்கு சென்று, அங்கிருந்த மணமகளிடன் தன்னுடன் வந்து நடனமாடும்படி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு மணமகள் மறுப்பு தெரிவித்தபோதும் மணமகன் விடுவதாக இல்லை. குடி போதையில் அனைவர் முன்பும் தள்ளாடிக்கொண்டே மணமகன் தன்னை நடனமாட வற்புறுத்தியதை தெரிந்து, மணமகள் உடனே தனது திருமணத்தை நிறுத்துமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதற்கு மணமகளின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து உடனே திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட வரதட்சணை பொருட்களை பெண் வீட்டார் கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பெண் வீட்டார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் மாப்பிளை வீட்டாரிடம் பேசி வரதட்சணை பொருட்களை திருப்பு கொடுக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement