நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
கடற்கரையில் ஒதுங்கிய 150 கிலோ எடையுள்ள மிகப்பெரிய டால்பின்! அதன் நிலைமையை பார்த்து மக்கள் அதிர்ச்சி..
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை கடற்கரை பகுதியில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நிலையில், மீன்பிடி சீசன் ஆரம்பமாகியுள்ளது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இந்த கடற்கரையில் டால்பின் மீன்கள் அதிகமாக காணப்படும்.
இவை பொதுவாக ஆழ்கடல் பகுதிகளில் வாழும் வகையானவை. ஆனால், சில சமயங்களில் கரையோர பகுதிகளுக்கும் வந்து, சிறிய மீன்களை வேட்டையாடுவது வழக்கமாக இருக்கிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை புதிய கலங்கரை விளக்கம் அருகே, கடலில் ஒரு மிகப்பெரிய டால்பின் மீன் இறந்த நிலையில் மிதந்து கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வனத்துறையினர்க்கு தகவல் வழங்கினர்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாடு.! எங்கு? எப்பொழுது?? தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு!!
விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த டால்பின் மீனை கரைக்கு இழுத்து கொண்டுவந்து ஆய்வு மேற்கொண்டனர். தகவலின்படி, இந்த டால்பின் சுமார் 7 அடி நீளமும், 150 கிலோ எடையும் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது, டால்பின் உயிரிழப்புக்கான மூல காரணம் என்ன என்பதனை கண்டறிவதற்காக, மருத்துவக் குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தாம்பரம் ரயில் நிலையத்தில் திடீரென இன்ஜின் பெட்டி மீது ஏறிய இளம்பெண்! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்! சென்னையில் பரபரப்பு...