நடுரோட்டில் அரைநிர்வாணமாக தாக்கப்பட்ட மருத்துவர்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!Doctors attacked by police in road

ஆந்திரா விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் டாக்டர் சுதாகர். இவர் சமீபத்தில் தான் பணியாற்றும் மருத்துவமனையில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மாஸ்க் போன்ற  உபகரணங்கள் போதுமானதாக  இல்லை என குற்றம்சாட்டினார். அதனால் அவரை ஆந்திர மாநில சுகாதாரத்துறை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் சுதாகர்  நரசிபட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயமடைந்து அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளார். பின்னர்,  போலிசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.   

doctors

இதனைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுதாகர் மது அருந்தியிருப்பதாக கூறியுள்ளனர். இதற்கிடையில்  மருத்துவர் சுதாகரை மேல்சட்டையின்றி கைகளை கட்டி வைத்து சில போலீசார் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ ஒன்றில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவியது.

 இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில், மருத்துவர் சுதாகர் மதுபோதையில் அங்கிருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் கான்ஸ்டபிள் ஒருவரின் செல்போனையும் பிடுங்கி வீசியுள்ளார். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என கூறியுள்ளார்