இந்தியா

சடலமாக கிடந்த 11 பேர்! அலறவைக்கும் மர்ம வீட்டில் குடியேறிய மருத்துவர்! 3 நாட்களிலே என்ன உணர்த்துள்ளார் தெரியுமா?

Summary:

doctor talk about 11 people dead house

டெல்லியில்  2018 ஆம் ஆண்டு ஜூலை1ஆம் தேதி ஒரே வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தூக்குபோட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த மர்ம மரணம் குறித்து தற்போது வரை தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 11 பேர் சடலமாக கிடந்த அந்த வீட்டிற்குள் பேய் இருப்பதாக தகவல்கள் பரவிவந்தது. மேலும் இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடியேற வருவர்களும் ஒரு வாரத்தில் வீட்டைவிட்டு வெளியேறி விடுவர்.இதனால் அப்பகுதியே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது.

இந்நிலையில் மோகன் என்ற மருத்துவர் டிசம்பர் 30ஆம் தேதி இந்த வீட்டில் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளனர். மேலும் அந்த வீட்டில் மருத்துவப் பரிசோதனை மையத்தை தொடங்கியுள்ள அவர், மத சார்பான சில ஹோமங்களையும் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் அந்த வீட்டில் இருப்பது குறித்து மருத்துவர் கூறுகையில், இங்கு என் குடும்பத்தினர் மற்றும் 7 ஆய்வக ஊழியர்களுடன் தங்கியுள்ளோம். நாங்கள் எதையும் யோசிக்காமல் வேலை செய்கிறோம். மேலும் கடந்த மூன்று நாட்களாக இங்கு எந்தவொரு அசாதாரணமான விஷயங்களும் நடக்கவில்லை, நாங்களும் அவ்வாறு எதனையும் உணரவில்லை. மேலும் தற்போது எங்கள் ஆய்வகத்துக்கு குறைந்த மக்களே வருகின்றனர், விரைவில் அதுவும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.


Advertisement