பாடலில் புகழ்ந்த கண்ணதாசன்.! ஸ்டுடியோவில் சிரித்த எம்.ஜி.ஆர்.!
ஸ்கேன் சென்டர் டாக்டருக்கு கொரோனா.! அவரிடம் ஸ்கேன் செய்த 62 கர்ப்பிணிகள் தனிமையில்.!
ஸ்கேன் சென்டர் டாக்டருக்கு கொரோனா.! அவரிடம் ஸ்கேன் செய்த 62 கர்ப்பிணிகள் தனிமையில்.!

கர்ப்பிணி பெண்களை ஸ்கேன் செய்யும் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரிடம் ஸ்கேன் செய்துகொண்ட 62 கர்ப்பிணி பெண்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை 2,129,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 142,707 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவால் இதுவரை 12,759 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிக பாதிப்புகளையும், உயிர் இழப்புகளைம் சந்தித்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிக்ராபூரில் ஸ்கேன் சென்டரில் வேலை செய்யும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறிப்பிட்ட மருத்துவரிடம் ஏப்ரல் 6 முதல் 8 ஆகிய தேதிகளில் ஸ்கேன் செய்துகொண்ட ஷிக்ராபூரைச் சேர்ந்த 62 கர்ப்பிணிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா அறிகுறி தென்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.