கொரோனா அச்சுறுத்தல்: முதலிடம் பிடித்த மகாராஷ்டிர மாநிலத்தின் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
கொரோனா அச்சுறுத்தல்: முதலிடம் பிடித்த மகாராஷ்டிர மாநிலத்தின் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனாக்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா தொற்றிலிருத்து 1500க்கும் அதிகமான மக்கள் குணமடைந்துள்ளனர். மேலும் இந்நோய் தொற்றுக்கு 420 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை 2919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் தொற்றுக்கு 295 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1578 நோய் பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லியில் தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.