திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து! ஒற்றை வார்த்தையால் மணமகள் அதிரடி முடிவு

Divorce in 3 mins after marriage


Divorce in 3 mins after marriage

கவுகாத்தியில் திருமணமான மூன்றே நிமிடத்தில் மணமகள் விவாகரத்து கேட்டு நீதிபதியிடம் மணு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கவுகாத்தி நீதிமன்றத்தில் ஒரு தமபதியினர் பதிவு திருமணம் செயவதற்காக விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நீதிபதியின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகைதந்தனர். 

திருமணம் முடியும் வரை எல்லாமே நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதியினர் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்தனர். அப்போது மணப்பெண்ணின் கால் சறுக்கியுள்ளது. இதனைப் பார்த்த மணமகன் சரியாக நடக்கத் தெரியாதா என்று கேட்டதோடு 'Stupid' என்று கூறியுள்ளார். 

divorce

பொது இடத்தில் அனைவரின் முன்பு மணமகன் இப்படி திட்டியதால் ஆத்திரமடைந்த மணப்பெண் உடனே திரும்பிசென்று திருமணம் செய்து வைத்த நீதிபதியிடமே விவாவகரத்து கோரினார். தன் கண்முன்னே அரங்கேறிய இந்த சம்பவத்திற்கு வேறு சாட்சியங்கள் இல்லாமல் நீதிபதியே விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தார். 

அந்த பெண் எடுத்துள்ள இந்த தணிச்சலுக்கு பலதரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.