இந்தியா

விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மனைவி-குழந்தை! உயிரிழந்த கணவனின் கடைசி பதிவு!

Summary:

died flight Passenger's Last Facebook Post

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்து ஏற்பட்டு விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து ஏற்பட்ட விமானத்தில், துபாயில் ஏறிய உடனே கேரளாவின் கோழிகோடைச் சேர்ந்த Sharafu Pilassery என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் back to home, அதாவது சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆனால் அவரின் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. அந்த விமான விபத்தில் சிக்கி தற்போது வரை உயிரிழந்துள்ள 18 பேரில் இவரும் ஒருவர், ஆனால் இவருடன் வந்த மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு மருத்துவனையில் சிகிச்சைபெற்று வருகிறார். குடும்பத்தினருடன் ஆசையாக சொந்த ஊருக்கு திரும்பிய அவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement