இந்தியா லைப் ஸ்டைல்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நிபந்தனைகளுடன் கூடிய பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Summary:

depavali - pattasu - high court judgemend

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளி. தற்சமயம் தீபாவளி நெருங்கும் வேளையில் பொதுமக்கள் தீபாவளியை  கொண்டாடும் வகையில் தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். தீபாவளி என்றாலே பட்டாசுதான் முக்கிய அங்கம் வகிக்கும்.

இந்த நிலையில் பட்டாசு வெடிக்கும் போது  ஏற்படும் அதிகமான இரைச்சல் மற்றும் புகையின் காரணமாக சுற்றுப்புறச் சூழல் மாசு அடைகிறது. இதனால் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல பொது நல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த நிலையில் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதால் உச்சநீதிமன்றம் ஆனது சில நிபந்தனைகளுடன் கூடிய பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த தீர்ப்பானது வெளிவந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Image result for deepavali pestival

 

உச்சநீதிமன்றத்தின் அந்த நிபந்தனைகள்:

 

தீபாவளி தினத்தன்று பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை
இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். 

குறைந்த அளவிலான புகை மற்றும் சத்தம் வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்.

அதிகமான அளவு அலுமினியம் கலந்த பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

ஆன்லைன் மூலம்  பட்டாசுகளை விற்பனை செய்ய தடை.

விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

பட்டாசை முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்ட மத்திய அரசும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களும், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனை செய்வோரும் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமாக உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.


Advertisement