இந்தியா

பெண் மருத்துவரின் கழுத்தை நெரித்து வழிப்பறி.. கயவர்கள் 48 மணிநேரத்தில் அதிரடி கைது.!

Summary:

பெண் மருத்துவரின் கழுத்தை நெரித்து வழிப்பறி.. கயவர்கள் 48 மணிநேரத்தில் அதிரடி கைது.!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணியாற்றி வரும் பெண்மணி, கடந்த 26 ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஷாலிமார் பாக் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அவ்வழியாக வந்த 3 பேர் கும்பல், மருத்துவரை வழிமறித்து கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த செயின் மற்றும் தங்க மோதிரத்தை பறித்து சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக செயல்பட்டு, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் 48 மணிநேரத்தில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டது என டெல்லி வடமேற்கு டி.சி.பி உஷா ரங்காணி தெரிவித்துள்ளார்.


Advertisement