சுடுகாட்டுக்கு சென்ற 9 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த பூசாரி.! பூசாரியின் செல்போனை பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!delhi-rape-victim-9-was-suffocated-by-priest-police-tel

டெல்லி கன்டோன்மென்ட் பகுதி ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமையை அவரது பெற்றோர் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டிற்குத் தண்ணீர் எடுத்து வர அனுப்பியுள்ளார். அவர்கள் எப்போதும் அருகில் உள்ள மயானத்தில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். இந்தநிலையில், அன்று மாலை தண்ணீர் எடுக்க சிறுமி மயானத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், சுடுகாட்டில் பூசாரியாக வேலை பார்த்து வரும் ஷியாம் என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், சிறுமியின் தாயிடம், சிறுமி இறந்து கிடப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது தண்ணீர் பிடிக்கக்கூடிய இடத்திற்கு அருகே சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

தண்ணீர் பிடிக்க வந்தபோது மின்சாரம் தாக்கி சிறுமி பலியாகி விட்டதாக கூறிய பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக சிறுமியின் உடலை அங்கேயே தகனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் கைகள் உள்ளிட்ட உடலின் சில பகுதிகளில் காயங்கள் இருப்பதை கண்ட அந்தத் தாய்க்கு சிறுமி சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் சிறுமியின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். 

Rape caseஆனால் சிறுமியின் தாயின் எதிர்ப்பை கண்டுகொள்ளாத அந்த நபர்கள் சிறுமியை அங்கேயே உடல் தகனம் செய்து விட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும், கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக போராட்டங்களும், கண்டனங்களும் எழுந்தன. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பூசாரி ராதே ஷியாம், அவரின் நண்பர்களான குல்தீப் குமார், நரைன், முகமது சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பூசாரி ஷயாம் தனது செல்போனில் 1300 ஆபாச இணையதளத்தில் சென்று ஆபாச படங்களை பார்த்துள்ளார் என்பதை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.