பாஜக பெண் பிரமுகர் மர்ம கொலை; தொழில் பங்குதாரர் தற்கொலை.. அதிகாரிகள் விசாரணை.!

பாஜக பெண் பிரமுகர் மர்ம கொலை; தொழில் பங்குதாரர் தற்கொலை.. அதிகாரிகள் விசாரணை.!


Delhi Narela Women Killed Mystery 

 

டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் வர்ஷா பவார். இவர் பாஜக பெண் பிரமுகர் ஆவார். இந்நிலையில், நேற்று இவரின் சடலம் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, அவரின் தொழில் பங்குதாரராக இருந்த சோகன்லால் சோனிபட் பகுதியில் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குபதிந்துள்ள காவல் துறையினர், கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.