ஒரு கிலோ தங்கத்தை திருடி காதலனுடன் உல்லாசமாக சுற்றிய மகள்.. சந்தேகத்தால் சிக்கிய பரிதாபம்..!

ஒரு கிலோ தங்கத்தை திருடி காதலனுடன் உல்லாசமாக சுற்றிய மகள்.. சந்தேகத்தால் சிக்கிய பரிதாபம்..!


daughter-who-stolen-one-kg-gold-was-arrested

காதலனுக்காக தாயின் நகைகளை திருடி போலி நகைகளை மாற்றி வைத்த மகளும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தன் காதலனுக்காக வீட்டில் இருந்த தன் தாயின் சுமார் ஒரு கிலோ எடையுள்ள தங்க நகைகளை திருடி போலி தங்க நகைகளை கொண்டுவந்து வீட்டில் வைத்த மகள் மற்றும் அவருடைய காதலனை அம்ருதஹள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜக்கூர் லேஅவுட்டில் வசித்து வருபவர் ரத்னம்மா,  அவருடைய மகள் தீப்தி (24) இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ரத்னம்மா தையல் பணி செய்துவந்தார். தீப்தி சிறிய வேலைகள் செய்து வந்துள்ளார். ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்த தீப்தி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தாயுடன் வசித்து வந்தார்.

இதற்கிடையில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற விரும்பிய தீப்தி, மதன் (27) என்பவர் நடத்திவந்த ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் சேர்ந்துள்ளர். இங்கு மதனுக்கும் தீப்திக்கும் இடையில் தொடங்கிய நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மதனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த போதும் தீப்தியின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

fake jewelry

இதற்கிடையில் சொகுசாக வாழ நினைத்த காதல் கிளிகள் ரத்தினாம்பாள் சேர்த்து வைத்திருந்த நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை தயார் செய்த்ததுள்ளனர். பின்னர் ரத்தினாம்பாளின் நகை பெட்டியில் இருந்த நகைகளை திருடியதுடன் போலி நகைகளை அந்த பெட்டியில் தீப்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில், தீப்தியின் தாய் ரத்னம்மா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு அவருடைய மகள் தீப்தி மற்றும் தீப்தியின் காதலன் மதன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 லட்சம் மதிப்புள்ள 725 கிராம் எடையுள்ள பல தங்க நகைகள் மற்றும் நகைகளை விற்பனை செய்ததால் கிடைத்த பணத்தில் வாங்கிய சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மதனின் காதலுக்கு அடிமையாகிவிட்ட தீப்தி தன் காதலனை மகிழ்விக்க வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடி வந்துள்ளதாகவும் அதனை விற்ற பணத்தில் இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.