உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை..! பிரணாப் முகர்ஜி அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடம்.! மருத்துவமனை வெளியிட ஷாக் ரிப்போர்ட்.!

மூளையில் நடந்த அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடலநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கையில் கூறியுள்ளது.
84 வயதாகவும் பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல்நிலையில் மோசமான நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு மூளையில் உள்ள இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதற்காக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதேநேரம் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டநிலையிலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் கூறினார்.
இந்நிலையில் இன்று வெளியான மருத்துவமனையின் அறிக்கையில், ”பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இதுவரை எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்” என ராணுவ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.