சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில்... அதிர்ச்சி சம்பவம்...!

சிஆர்பிஎப் சப் - இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில் பணியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய உளவுத்துறை இயக்குனர் தபன் டிகாவின் அரசு பங்களா டெல்லி துக்ளக் ரோட்டில் உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் துணை சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராஜ்பிர் சிங் (53) என்ற உதவி சப் இன்ஸ்பெக்டர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.