கனிமூன் செல்ல ஆசையாக கிளம்பிய தம்பதி! விமான நிலையத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி.

கனிமூன் செல்ல ஆசையாக கிளம்பிய தம்பதி! விமான நிலையத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி.



Couples honeymoon plan collapsed

மும்பையை சேர்ந்தவர்கள் அன்கித் மற்றும் மோனாலி ஷா தம்பதி. கடந்த 2013-ல் திருமணமான இவர்கள் சமீபத்தில் நியூசிலாந்துக்கு தேனிலவு செல்ல முடிவெடுத்துள்னனர். நியூசிலாந்துக்கு நேரத்தில் விமானம் கிடைக்காததால் மும்பையில் இருந்து பேங்காக்கிற்கும், பேங்காக்கில் இருந்து நியூசிலாந்துக்கு வேறொரு விமானத்திலும் செல்ல முடிவு செய்து டிக்கெட் புக் செய்துள்னனர்.

இதையடுத்து விசாவுடன் விமான நிலையத்துக்கு புதுமணத்தம்பதி சென்ற போது பேங்காக் - நியூசிலாந்தில் உள்ளஆக்லாந்துக்கான போர்டிங் பாஸ் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கனிமூன் செல்லும் கனவு தகர்க்கப்பட்டு தேனிலவை ரத்து செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டனர்.

Crime

இதனால் மனஉளைச்சல் அடைந்த தம்பதி இதுகுறித்து நுகர்வோர் கமிஷனில் புகார் கொடுத்தனர். அதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதிக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ 5.2 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க விமான நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.