
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா மாநகராட்சியின் வார்டு கவுன்சிலராக
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா மாநகராட்சியின் வார்டு கவுன்சிலராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் கம்பாரா ரமேஷ் என்பவர் உள்ளார். கவுன்சிலர் ரமேஷ் நேற்று இரவு விபத்தில் அடிபட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைத்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் ரமேஷின் மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ரமேஷ் வழியை மறித்து நின்றுக்கொண்டிருந்த போது ஒருநபர் காரை அவர் மீது ஏற்றி சென்றுள்ளார்.
ரியஸ் எஸ்டேட் தொழில் செய்துவரும் ரமேஷ் நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுக்கு, காக்கி நாடாவின் புறநகர் பகுதி யில் விருந்து அளித்தார். அப்போது அவரது தொழிலில் போட்டியாளரான அவரது நண்பர் குராஜனா சின்னா என்பவரும் பங்கேற்றுள்ளார். அவர்களுக்கிடையே அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குராஜனா சின்னா, அங்கிருந்து காரில் புறப்பட்டுச் செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால் காரின் எதிரே நின்று ரமேஷ் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ரமேஷ் மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான குராஜனா சின்னாவை, போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement