கொரோனா வைரஸின் தாக்கம்! 6,000 கோழிகளை உயிருடன் புதைத்த வியபாரி.! வீடியோ உள்ளே.

Corono


corono

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்நோய் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 50க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய் முக்கியமாக இறைச்சியின் மூலம் தான் பரவி வருகிறது என்ற வதந்தியை சிலர் பரப்பி வருகின்றனர். இதனால் மக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழிக்கறியின் விலையும் குறைந்து கொண்டே வருகிறது.

corono

இந்நிலையில் கர்நாடகாவின் நுல்சூர் பகுதியில் உள்ள கோழி வியபாரி மகந்தர் என்பவர் தன்னுடைய 6,000 கோழிகளை உயிருடன் புதைத்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.