இந்தியா

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.!

Summary:

Coronavid19

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸ் பரவுதலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

சிலர் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்தார் அவரின் உடலை அடக்கம் செய்யும் போது கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு விடுமோ என அஞ்சி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ரன்தீப் குலோரியா கொரோனா சுவாச குழாய் வழியாக பாதிப்பதால் இறந்தவரின் உடல் வழியாக பரவாது, இருமல் வழி மட்டும் தான் பரவும் என்று கூறியுள்ளார்.

மேலும் சடலத்தை தொடாமல் மத அடிப்படையில் வேதங்களை படித்தல் மற்றும் புனித நீரை தொளித்தல் போன்ற சடங்குகளை செய்யலாம் எனவும் கூறியுள்ளது. மேலும் உடலை எரித்த பின்னர் அந்த சாம்பலை எடுத்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உறவினர்கள் அனைத்து சடங்குகளை முடித்த பின்னர் தங்களது காலை கை, கால்களை தூய்மையாக சப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் எந்த ஒரு பெரிய கூட்டங்களும் சேரக்கூடாது. ஏனெனில் தொற்று நோய் வருவதற்கான சூழ்நிலை அது ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


Advertisement