முன்பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி.!

முன்பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி.!


Corona vaccine for those who have booked

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை வினியோகிக்கும் பணி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் துவங்கியுள்ளது.

corona

இந்தியாவில், மூன்று விதமான மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசிகள் கிடைத்ததும், அவற்றை மக்களுக்கு எப்படி வழங்குவது என்பது தொடர்பான ஆலோசனைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

அதில் தினசரி 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும், முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவருக்கே தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.