இந்தியா Covid-19

மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!

Summary:

மத்திய ரசாயன துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்து.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மருத்துவ ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்கள் என பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவருக்கு கொரோனா உறுதியானது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்.


அவரது ட்விட்டர் பதிவில், கொரோனா பாதிப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன், அதற்கான பரிசோதனைகளை நான் செய்து கொண்டேன்.  பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.  என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement