எல்லாத்தையும் விட மக்கள் உயிர் தான் முக்கியம்.! இந்தியாவில் தீவிரமாக கொரோனாவை குறைத்த மாநிலம்.! எப்படி தெரியுமா.?

எல்லாத்தையும் விட மக்கள் உயிர் தான் முக்கியம்.! இந்தியாவில் தீவிரமாக கொரோனாவை குறைத்த மாநிலம்.! எப்படி தெரியுமா.?



corona-positive-decreased-in-mumbai

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில், தற்போது இந்தியாவில் அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருவதால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இந்திய மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் இருந்துவந்தது. இதிலும் அதிக மக்கள்தொகை கொண்ட மும்பையில் கடந்த மாதம் வைரஸ் தாக்கம் உச்சத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து புதிதாக வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் மக்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

கொரோனா இந்தியாவில் பரவிய போது, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிப்போரின் தினசரி எண்ணிக்கை 67 ஆயிரம் வரை சென்றது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே முதலில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அறிவித்தார். அதன் பின்னரும் நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவை அவர் மாநிலத்தில் பிறப்பித்தார். 

corona

144 தடை உத்தரவுக்கு பிறகு அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,888 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த வியாழனன்று 7400 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தீவிரமாக குறைந்து வருகிறது. 

மும்பையில் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த 144 தடை பற்றிய அறிவிப்பை வெளியிடும்போது, எதிர்க்கட்சியான பாஜக மட்டுமின்றி தொழில்துறையினர், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசும் கூட கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, முதல்வர் உத்தவ் தாக்கரே, மக்களின் வாழ்வாதாரம் முக்கியமானதுதான். ஆனால் அதைவிட அவர்களின் வாழ்க்கை முக்கியமானது என்று கூறி விளக்கம் அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.