கொரோனாபரவலை மிக அருமையாக கையாண்டு கட்டுப்படுத்திய கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரிப்பு!corona increased in kerala

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. கொரோனா தொற்று பரவலை மிக அருமையாக கையாண்டு கட்டுப்படுத்தியதாக உலக அளவில் பாராட்டப்பெற்ற கேரளாவில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

கேரளாவில் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை  வெளியிட்ட அறிக்கையில் இன்று ஒரே நாளில் 2,172  பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,354 ஆக அதிகரித்துள்ளது.

corona

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1,292  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 36,539  பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதுவரை  19,538 பேர் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள அரசாங்கமும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.