
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் சமீப காலமாக கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. அதேபோல் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்திய அளவில் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 50,129 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78,64,811ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 578 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 118534 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,69,479 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement