இந்தியாவிலே அதிகபட்சமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மாநிலம் எது? தமிழகத்தில் எத்தனை பேருக்கு?



Corona heavy affected state

தமிழகத்தில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்தநிலையில், கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42-ஆக உள்ளது.

corona

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞரும், அயர்லாந்தில் இருந்து திரும்பிய நபரும் டிஸ்சார்ச் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.