இந்தியா

கொரோனாவில் இருந்து உயிர்பிழைத்த மருத்துவருக்கு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் காத்திருந்த பேரதிர்ச்சி.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Corona affected second time to doctor

கொரோனாவில் இருந்து குணமடைந்த மருத்துவர் ஒருவருக்கு இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணியாற்றி வந்தநிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகளை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கடந்த மே மாதம் 15ம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து 15 நாட்கள் சிகிச்சை பெற்று, இரண்டுமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதும் கடந்த மே 30 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு சென்றும் இரண்டு வாரங்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர் அதன் பின்னர் மீண்டும் பணிக்குவந்துள்ளார்.

இந்நிலையில் பணிக்கு திரும்பிய 2 வாரங்களில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால்  சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும் சக மருத்துவர்கள் அவரது சளி மாதிரியை சோதனை செய்ததில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதுமுறை கொரோனா வருவது என்பது மிகவும் அரிது என கூறும் நிபுணர்கள், சம்மந்தப்பட்ட மருத்துவரின் கொரோனா முழுமையாக குணமடையாமல் இருந்திருக்கலாம் எனவும், செயலற்ற நிலையில் அவரது உடலில் இருந்த கொரோனா செல்கள் மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கலாம் எனவும் கூறிஉள்ளன்னர்.


Advertisement