காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் வரலாம்.! இன்று நடக்கும் முக்கிய கூட்டம்.!

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் வரலாம்.! இன்று நடக்கும் முக்கிய கூட்டம்.!



congress meetting today

சமீபத்தில் நடந்துமுடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. எஞ்சியுள்ள 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.

நடந்துமுடிந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, தேர்தலில் தோல்வியைச் சந்தித்த 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.  

இதனையடுத்து  ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் இன்று (16-03-2022) நடக்கிறது. டெல்லியில் உள்ள மூத்த தலைவர் கபில்சிபல் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.