மறைந்த நடிகர் விவேக், துளசி அய்யா வாண்டையாருக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்.!

மறைந்த நடிகர் விவேக், துளசி அய்யா வாண்டையாருக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்.!


condolence-resolution-for-actor-vivek-and-thulasi-aiya

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது . முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி மற்றும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. மறைந்த எழுத்தாளர் கி.ரா, நடிகர் விவேக், துளசி அய்யா வாண்டையார், முன்னாள் எம்எல்ஏ காளியண்ணன் ஆகியோருக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபடஉள்ளது. மேலும், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.

இரங்கல் குறிப்பு தீர்மானத்திற்கு பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதம் தொடங்குகிறது . கேள்வி – பதில் நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் உள்ளிட்டவை இல்லாமல் 24ஆம் தேதி வரை கூட்டத் தொடர் தொடர்ந்து நடக்கவுள்ளது.