ஆத்தாடி! மெதுவா பேசுங்கணு சொன்னது ஒரு குத்தமா? கல்லூரி ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமையை பார்த்தீர்களா!

ஆத்தாடி! மெதுவா பேசுங்கணு சொன்னது ஒரு குத்தமா? கல்லூரி ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமையை பார்த்தீர்களா!



college-lecturere-finger-broke-by-roommate

கேரளா காசர்கோட் பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். 27 வயது நிறைந்த இவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் போட்டோகிராபி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இதற்காக அவர் பெங்களூர் முட்டினாபால்யாவில் ரூம் எடுத்து தங்கி வருகிறார்.

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு உன்னிகிருஷ்ணன் போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த பக்கத்து அறையை சேர்ந்த கிரண் என்பவர் உன்னிகிருஷ்ணனின் அறை  நண்பருடன் சத்தம்போட்டு பேசிக் கொண்டு  இருந்துள்ளார். 

finger

இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் கிரணிடம் கொஞ்சம் மெதுவாகப் பேசுங்கள், போனில் பேசுவது தெளிவாக கேட்கவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் போன்பேசி முடித்து விட்டு அவர் படுக்க சென்றுள்ளார். அப்பொழுது அங்கு கோபமாக வந்த கிரண் உன்னிகிருஷ்ணனிடம் சண்டை போட்டு அடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் கிரண் அடிப்பதை தடுத்துள்ளார். இதில அவரது நடுவிரல் ஒடிந்துவிட்டது.

அதனைத்தொடர்ந்து உன்னிகிருஷ்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது விரலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் உன்னிகிருஷ்ணனின் விரலுக்கு 36 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது.. இந்நிலையில் கிரண் மீது அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை  கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.