இந்தியா

நக்சல் தாக்குதலில் வீரமரணம்.. காவலரான மகனுக்கு கோவில் கட்டிய பாசமிகு. தாய்.!

Summary:

நக்சல் தாக்குதலில் வீரமரணம்.. காவலரான மகனுக்கு கோவில் கட்டிய பாசமிகு. தாய்.!

மாவோயிஸ்ட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மகனுக்கு, தாய் கோவில் கட்டிய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர், பெர்வா ஆரா கிராமத்தை சேர்ந்தவர் பாசில் டோப்போ. இவர் சத்தீஸ்கர் காவல்துறையில், மாநில நக்சல் ஒழிப்புப்படையில் பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த 2011 ஆம் வருடம் பாஸ்டர் பகுதியில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாசில் டோப்போ வீரமரணம் அடைந்தார். மகன் வீரமரணம் அடைந்துவிட்டாலும், மகனின் நினைவுகள் அவரின் தாயாரை வாட்டி வதைத்துள்ளது. 

இதனால் காவல்துறை ஜவான் பாசில் டோப்போவின் தாயார், நடப்பு வருடத்தில் மகனின் இறந்தநாளுக்குள் கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஊரில் தனக்கு சொந்தமான இடத்தில் மகனுக்கு சிலை எழுப்பி கோவில் கட்டியுள்ளார். 

ஊர்களில் உள்ள காவல் தெய்வங்களை போல, துப்பாக்கியுடன் வீரமரணம் அடைந்த காவல் அதிகாரி பாசில் டோப்போவின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளன. தாயின் நெகிழ்ச்சி செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெய்ஹிந்த்.


Advertisement