காலாவதியான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகிறதா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு..!

காலாவதியான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகிறதா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு..!


Central Govt Says False Statement about expired vaccines are being administered

இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியானது மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காலாவதியான கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இதுகுறித்த குற்றசாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, "ஊடகத்தின் அறிக்கைகள் தவறானது. அவை முழுமையற்ற தகவலின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு கோவேக்சின் மருந்தின் ஆயுளை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 

கோவிட்ஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.