மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி 2 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளைஞர்.! கேரள அரசின் அதிரடி முடிவு.!

மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி 2 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளைஞர்.! கேரள அரசின் அதிரடி முடிவு.!


case filled on babu

கேரள மாநிலம், மலம்புழா அருகே உள்ள செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு, இவர் தனது இரண்டு நண்பர்களோடு குரும்பச்சி மலைக்கு மலையேற்ற பயணம் சென்றார். அப்போது மலை ஏறுவதற்கு சிரமமாக இருந்த காரணத்தால் மற்ற இரண்டு பேர் திரும்பிவிட்டனர். அப்போது பாபுவிற்கு கால் தடுக்கி மலையின் நடுவில் சிக்கினார். 

இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ராணுவ வீரர்களின் உதவியுடன் பாபு மீட்கப்பட்டார். பாபு மலைக்குன்றில் இருந்து மீட்கப்பட்ட பிறகு மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பட்டார். இந்த நிலையில் பாபு மீது அரசாங்கத்திற்கு சொந்தமான வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக SEC27 கீழ் கேரளா வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் வரும் வியாழக்கிழமை அவரை முதல் நிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாபு உடன் இணைந்து மலை ஏறிய மற்ற மூன்று இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவது குறித்து ஆலோசித்து வருவதாக வன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துமீறி நுழைந்ததற்கான சட்டபூர்வ வழிமுறைகளை கடைபிடித்துதான் ஆகவேண்டியுள்ளது. இது அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழையும் மற்ற இளைஞர்களும் ஒரு முன் எச்சரிக்கையாக அமையும் என வன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.