ஆடை இல்லாமல் அலைகிறார்கள்..! நர்ஸ்களுக்கு ஆபாச சிக்னல் தருகிறார்கள்.! 6 கொரோனா நோயாளிகள் மீது அடுத்தடுத்து எழும் புகார்.!

ஆடை இல்லாமல் அலைகிறார்கள்..! நர்ஸ்களுக்கு ஆபாச சிக்னல் தருகிறார்கள்.! 6 கொரோனா நோயாளிகள் மீது அடுத்தடுத்து எழும் புகார்.!


Case filed against to 6 Corono patients who misbehave in hospital

ஆடை இல்லாமல் அலைகிறார்கள், செவிலியர்களிடம் அசிங்கமாக சிக்னல் தருகிறார்கள், சிகரெட் கேட்டு தொல்லை செய்கிறார்கள் என ஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டு தற்போது காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா வைரஸ் டெல்லி ஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் 2500 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையியல், மாநாட்டுக்கு சென்று வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு காஸியாபாத் எம்எம்ஜி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.

corono

இவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்கள் 6 பேரும் மருத்துவமனை உள்ளே நிர்வாணமாக சுற்றி வருவதாகவும், பணியில் இருக்கும் நர்ஸ்களிடம் ஆபாசனம முறையில் சிக்னல் தருவதாகவும், மிகவும் மோசமான பாடல்களை கேட்பதாகவும், மருத்துவமனை ஊழியர்களிடம் சிகரெட் கேட்டு தொல்லை செய்வதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இதனை அடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு, அதுபோல் நடந்துகொண்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் 6 பேரையும் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.