கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து.! அப்பளம் போல் நொறுங்கிய கார்.! சோக சம்பவம்.!

கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து.! அப்பளம் போல் நொறுங்கிய கார்.! சோக சம்பவம்.!


car accident in up

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை அவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது,  புரைனா என்ற பகுதியில் எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.

அங்கு நடந்த விபத்தில் அவர்கள் பயணம் செய்த கார் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த மேலும் இருவர் பலத்த காயத்துடன், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு நடந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.