சோப்பு நுரையுடன் குளித்துகொண்டிருந்த நபரிடம் ஓட்டு கேட்ட வேட்பாளர்.! வேற லெவல் பிரச்சாரம்.!candidate-asked-vote-to-bath-person

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் மேற்கு வங்கம் கராக்புர் சாதர் பகுதியில் போட்டியிடும் ஹிரன் சேட்டர்ஜி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பா.ஜ.க.வின் இளம் வேட்பாளரான ஹிரன் சேட்டர்ஜி  தனது தொகுதியில் ,நேற்று அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ஒருவர் வீட்டின் வெளிப்புறத்தில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். வேட்பாளர் அவரின் அருகே சென்று வாக்கு சேகரித்துள்ளார். அப்போது அந்த நபருடன் வேட்பாளர் புகைப்படமும் எடுத்துள்ளார். உடம்பு முழுவதும் சோப்பு நுரையுடன் இருந்த அவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.