பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து! திடீரென பற்றிய தீ! பேருந்தில் கருகிய பயணிகள்!bus fire accident in karnataka

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் பகுதியில் இன்று அதிகாலையில் தனியார் பேருந்து ஒன்று கே.ஆர்.ஹல்லி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த பேருந்து திடீரென  தீப்பிடித்து எரிந்தது. பேருந்தின் இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், பேருந்தில் பற்றியிருந்த தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அந்த விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.