இந்தியா

பேருந்து தீப்பற்றி எரிந்து, உடல் கருகி உயிரிழந்த பயணிகள்! அதிரடியாக முதல்வர் விடுத்த அறிவிப்பு!

Summary:

Bus accident in uttarapradesh

உத்தரப்பிரதேசத்தில் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நோக்கி 45 பயணிகளுடன் படுக்கையறை வசதியுடன் கூடிய சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது பேருந்து கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிய துவங்கியது. 

உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் பயங்கர காயங்களுடன் மீட்கப்பட்ட 21பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கன்னூஜ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேருந்து விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


Advertisement