திடீரென சரிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம்! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு!



building collapse in mumbai.

மும்பை டோங்ரியில் டண்டெல் தெருவில் உள்ள கேசர்பாய் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் 40 க்கும் மேலானோர் சிக்கியிருய்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 
கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதே இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



 

அந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலரும் அருகில் இருந்த ஜேஜே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கட்டட விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.