இந்தியா

அதிகாலையில் இடிந்து விழுந்த கட்டிடம்! அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 20 பேர் உயிரிழப்பு! மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

Summary:

building accident in mumbai

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் ஒன்று நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை என்பதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த பலரை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவரை கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement