இந்தியா

தினமும் விஸ்கி குடித்து ஒரு வருடத்திற்கு 1 கோடி சம்பாதிக்கும் அதிசய எருமை மாடு..! அப்படி என்ன விசேஷம் தெரியுமா.?

Summary:

Buffalo earn 1 crore per year

சண்டிகர் மாநிலம் ஹரியாணாவில்  நரேஷ் குமார் என்பவர் முர்ரே எனும் இனத்தை சேர்ந்த சுல்தான் என பெயரிடப்பட்டுள்ள எருமைக் கிடா ஒன்றினை வளர்த்து வருகிறார்.

இந்த வகை எருமை மற்ற எருமைகள் போல் இல்லாமல் சுமார் ஒன்றரை டன் எடை கொண்டது. இந்த எருமை குறித்து பேசிய அதன் உரிமையாளர் நரேஷ் குமார் கூறும்போது, நம் நாட்டிலையே அதிக எடை கொண்ட எருமை இவர் வளர்ந்துவரும் சுல்தான்தானாம். இந்த எருமையை பராமரிக்க ஒருநாளைக்கு ரூ.2,800 முதல் ரூ.3,100 வரை செலவாகிறதாம்.

ஒரு நாளைக்கு இதற்கு 10 லிட்டர் பால், 15 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட் போன்றவை உணவாக வழங்கப்படுவதாகவும், ஒருநாளைக்கு 5 கிலோமீட்டர் வரை எருமையை நடக்க வைப்பதாகவும் அதன் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், தினமும் இரவு ஒருபாட்டில் விஸ்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

சரி அப்படி உந்த எருமை மாட்டில் என்னதான் விசேஷம்னு கேட்குறீங்களா? மிக அரியவகை எருமையான இந்த சுல்தானின் ஒரு டோஸ் விந்தணுவை சுமார் 300 ரூபாய்க்கு இதன் உரிமையாளர் விற்பனை செய்துவருகிறாராம். இதன்மூலம் ஒரு ஆண்டுக்கு இந்த எருமை மூலம் 1 கோடி வரை வருமானம் வருகிறதாம்.

அதுமட்டும் இல்லாமல், எருமை கிடாக்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இதுவரை 7 முறை சுல்தான் வெற்றிபெற்றுள்ளதாம். இந்த எருமை கிடாவின் விலை சுமார் 21 கோடியாம்.


Advertisement