இந்தியா

100-நாள் வேலை திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு! எவ்வளவு தெரியுமா?

Summary:

Budget for 100 naal vellai thittam

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இது வகையான மக்களும் பயன்பெறும் வகையில் இரு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது இந்த பட்ஜெட்.

விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் உதவித்தொகை, புதிதாக மீன்வளத்துறை, தனிநபர் வருமான வரி சலுகை என பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அளித்துள்ளது மத்திய அரசு. மேலும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு  கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமானது 2005ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் இந்த திட்டத்திற்கு ரூ.37,588 கோடி நிதியும் கடந்த ஆண்டு ரூ.55,000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ.60,000 கோடி நிதியை இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதனால் கிராமப்புற வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    


Advertisement