இந்தியா

தாலி கட்டும் நேரத்தில் எழுந்து நின்று, மணமகள் செய்த காரியம்! அதிர்ச்சியில் மூழ்கிய பெற்றோர்கள்! இதுதான் காரணமா!

Summary:

Bride stop marriage while knoting

தெலுங்கானா மாநிலம், வானபார்தி மாவட்டத்தில்  சார்லபள்ளி என்னும் கிராமத்தில்  திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் திருமண மேடைக்கு மணமகன்  வந்துள்ளார். பின்னர் மணப்பெண்ணின் வருகைக்காக காத்துகொண்டு இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து மணமேடைக்கு மணப்பெண் வந்தநிலையில் மணமகன் தாலிகட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்ட சென்றபோது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக மண மேடையிலிருந்து மணமகள் எழுந்துள்ளார். பின்னர்  இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார். மேலும் பெற்றோர்களும் அவரது உறவினர்களும் எவ்வளவோ கூறியும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர்  அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் திருமண மேடைக்கு வருவதற்கு முன்பு மணமகள் அவரது முன்னாள் காதலனை பார்த்துள்ளதாகவும், அதனால்  மனம்மாறிய அவர்  திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் அந்த இளைஞரை அங்கு பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement