திருமணம் முடிந்த சில நிமிடங்களிலே அடித்துகொண்ட மணமக்கள்.! களேபரமான கல்யாண வீடு.! வைரல் வீடியோ!!

திருமணம் முடிந்த சில நிமிடங்களிலே அடித்துகொண்ட மணமக்கள்.! களேபரமான கல்யாண வீடு.! வைரல் வீடியோ!!


Bride and groom attacking in wedding stage video viral

தற்காலத்தில் திருமணம் என்றாலே கோலாகலமாக திருவிழாக்களை போல இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேலும் திருமண நிகழ்ச்சிகள் என்றாலே குதூகலம் மற்றும் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதற்கிடையில் திருமண மேடையில் மணமக்களுக்கிடையே நடக்கும் பிரச்சினைகள் குறித்த வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி ஷாக் கொடுக்கிறது.

தற்போது திருமணமான சில நிமிடங்களிலேயே மணமக்கள் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கி கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் புதிதாக மணமுடித்த தம்பதியினர் இருவரும் இனிப்பு ஊட்டிவிட்டுள்ளனர். அப்பொழுது மணமகன் தன்னை இனிப்பு உண்ண வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த மணமகள் அவரை அறைந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மணமகன் உடனே மணமகளை அடிக்க, இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு வந்த உறவினர்கள் எவ்வளவு தடுத்தும் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மணமேடையில் மணமக்கள் செய்த செயலால் திருமண வீடே களேபரமானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.