காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு.. எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை...!

காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு.. எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை...!


Border security soldier commits suicide by shooting in Kashmir

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜம்முவின் உதம்பூர் மாவட்டத்தில் இந்தோ-தீபெத் படையின் எட்டாவது பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த பிரிவில் படைவீரராக பணியாற்றி வந்தவர் பூபேந்திர சிங். இவர் தேவிகா கட் சமூதாய கூடத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த சக வீரர்களுக்கும் பூபேந்திர சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பூபேந்திர‌சிங் தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை சரமாரியாக சுட்டார். பின்னர், தனது துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டு கொண்டு  பூபேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார்.

பூபேந்திர சிங் சுட்டதில் மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மூன்று வீரர்களும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தன்னுடன் பணிபுரியும் சக வீரர்கள் மீது பூபேந்திர சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.