அரசியல் இந்தியா

காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது! இதில் அரசியல் செய்ய வேண்டாம் பாஜக எம்.பி வேண்டுகோள்!

Summary:

BKP MP son got accident


சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக, பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக மாநிலங்களவை எம்.பி, ரூபா கங்குலி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் மகன் ஆகாஷ் முகர்ஜி. இவர் நேற்று இரவு கொல்கத்தா கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். 

ஆகாஷ் முகோபாத்யாய் மதுபோதையில் இருந்ததாக விபத்தை நேரில் கண்டவர்கள் குற்றம் சாட்டினர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  ஆகாஷ் முகோபாத்யாவிடம் விசாரித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் உள்பட எந்த சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ரூபா கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தனது மகனை தான் மிகவும் நேசிப்பதாகவும் எனினும் சட்டம் அதன் கடமையை செய்யும். இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.  


Advertisement